புனேவில் இருந்து 4¾ லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன

புனேவில் இருந்து 4¾ லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன.
புனேவில் இருந்து 4¾ லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன
Published on

ஆலந்தூர்,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 1 கோடியே 71 லட்சம் தடுப்பூசிகள் வந்து உள்ளன. தமிழகத்தில் இதுவரை சுமார் 1 கோடியே 67 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.

இந்தநிலையில் புனேவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் 40 பெட்டிகளில் 4 லட்சத்து 78 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன. இவை பெரியமேட்டில் உள்ள மத்திய சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

மத்திய தொகுப்பிற்கு வந்த தடுப்பூசிகள் அனைத்தும், தேவைப்படும் தென் மாநிலங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com