ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கொரோனாவுக்கு 5 பேர் பலி

ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கொரோனாவுக்கு 5 பேர் பலி
ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கொரோனாவுக்கு 5 பேர் பலி
Published on

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 88 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 79 பேருக்கு தொற்று உறுதி ஆனது.

மாவட்டம் முழுவதிலும் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 673 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நேற்று 4 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 35 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் நேற்று 55 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டம் முழுவதும் 518 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com