திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலி
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலி
Published on

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது குறைய தொடங்கி உள்ளது. இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் 206 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதனால் நேற்று வரை மாவட்டம் முழுவதும் 47 ஆயிரத்து 700 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனா. இதில் 45 ஆயிரத்து 695 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். தற்போது ஆயிரத்து 445 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 560 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com