தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலி

தேனி மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 5 பேர் பலியாகினர்.
தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலி
Published on

தேனி:

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்து உள்ளது. நேற்று ஒரே நாளில் 342 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால், மாவட்டத்தில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 24 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 951 பேர் நேற்று குணமடைந்தனர். தற்போது 4 ஆயிரத்து 234 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதற்கிடையே கொரோனா பாதிப்புடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உத்தமபாளையத்தை சேர்ந்த 43 வயது ஆண், தேனியை சேர்ந்த 65 வயது மூதாட்டி, பெரியகுளத்தை சேர்ந்த 73 வயது மூதாட்டி உள்பட 5 பேர் நேற்று பலியாகினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com