நாகர்கோவிலில் கோவில் விழாவில் பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

நாகர்கோவிலில் கோவில் விழாவில் பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
நாகர்கோவிலில் கோவில் விழாவில் பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
Published on

நாகர்கோவில்,

நாகர்கோவில் கோட்டார் வடலிவிளை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி முத்துலட்சுமி (வயது 37). சம்பவத்தன்று இவர் வடலிவிளை பகுதியில் உள்ள ஒரு கோவில் விழாவுக்கு சென்றார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர், முத்துலட்சுமி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து முத்துலட்சுமி கோட்டார் போலீசில் புகார் அளித்தார். அதன்போல் போலீசார் நகையை திருடி சென்ற மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com