எல்.ஐ.சி. நிறுவனத்தில் 590 அதிகாரி பணிகள்

எல்.ஐ.சி. நிறுவனத்தில் அதிகாரி பணிக்கு 590 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-
எல்.ஐ.சி. நிறுவனத்தில் 590 அதிகாரி பணிகள்
Published on

பிரபலமான காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்று எல்.ஐ.சி. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இதில் தற்போது உதவி நிர்வாக அதிகாரி (ஏ.ஏ.ஓ.) பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. பொது, ஐ.டி., சார்ட்டடு அக்கவுண்டன்ட், ஆக்சூரியல், ராஜ்பாஷா போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 590 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிரிவு வாரியாக பொது பணியில் - 350 இடங்களும், ஐ.டி. பிரிவில் 150 இடங்களும், சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் பிரிவில் 50 இடங்களும், ஆக்சூரியல் பிரிவில் - 30 இடங்களும், மொழி பிரிவில் 10 இடங்களும் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 1-3-2019-ந் தேதியில் 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி

எம்.சி.ஏ., எம்.எஸ்சி., சி.ஏ., படித்தவர்களுக்கும் முதுநிலை இந்தி- ஆங்கிலம் படித்தவர்களுக்கும், இதர பட்டப்படிப்புகளை படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம்.

கட்டணம்

இந்த பணிகளுக்கு ரூ.600 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணம் செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற 22-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இதற்கான முதல்நிலை தேர்வு மே மாதம் 4 மற்றும் 5-ந் தேதிகளில் நடத்த உத்தேசிக்கப் பட்டு உள்ளது. முதன்மைத் தேர்வு 28-6-2019-ந் தேதி நடத்தப்பட உள்ளது. விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://www.licindia.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com