உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் 6 உணவுகள்

காலை வேளையில் சாப்பிடக் கூடாத உணவுகள் பற்றி பார்ப்போம்.
உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் 6 உணவுகள்
Published on

காலை உணவு சத்து மிக்கதாக இருக்க வேண்டும். ஏனெனில் அதுதான் நாள் முழுவதும் உடலை ஊட்டச்சத்துடனும், உற்சாகமாகவும் வைத்திருக்க உதவும். அதேவேளையில் காலை உணவு தேர்வில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உடல் எடையை அதிகரிக்க செய்துவிடும். 

1.யோகர்ட்:

இதில் புரோபயாடிக் கால்சியம் அதிகம் உள்ளது. இது பற்கள் மற்றும் ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. இருப்பினும் யோகர்ட்டை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது, வயிற்றில் உள்ள அமிலம் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடும். அதனால் காலையில் ஏதாவது சாப்பிட்ட பிறகு யோகர்ட் சாப்பிடுவது நல்லது. இல்லாவிட்டால் அசிடிட்டி பிரச்சினையையும் ஏற்படுத்திவிடும். உடல் பருமன் பிரச்சினைக்கும் வித்திடும்.

2. எண்ணெய் உணவுகள்:

காலையில் எண்ணெய் அதிகம் கலந்திருக்கும் உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதிலும் வெப்பநிலை அதிகமாக இருக்கும் சமயங்களில் வறுத்த உணவு பொருட்களை சாப்பிட்டால் உடலில் நீரிழப்பை ஏற்படுத்திவிடும். அத்துடன் உடல் எடையை அதிகரிக்கச் செய்துவிடும்.

3. இனிப்பு உணவுகள்:

இனிப்பான உணவு பொருட்களை காலையில் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதிக சர்க்கரை கலந்திருக்கும் உணவுகள் பிரக்டோஸ் செயல்பாடுகளின் காரணமாக வயிற்றில் அதிக சுமையை ஏற்படுத்தும். குறிப்பாக வெறும் வயிற்றில் இத்தகைய சர்க்கரை உணவுகளை உண்ணும்போது இன்சுலின் பிரிவது கடினமாகிவிடும். அதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிப்பதிலும் சிக்கல் நேரிடும். உடல் எடையும் அதிகரிக்க தொடங்கிவிடும்.

4. சிட்ரஸ் பழங்கள்:

சிட்ரஸ் பழங்களையும் தவிர்க்க வேண்டும். அதில் சிட்ரிக் அமிலம் அதிகம் இருப்பதால் புளிப்பு சுவை கொண்டிருக்கும். அவற்றை உட்கொள்ளும்போது வயிற்றில் அதிகப்படியான அமிலம் உற்பத்தியாகும். அதன் காரணமாக நெஞ்செரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம்.

5. காரமான உணவுகள்:

காரமான உணவுகளை காலையில் தவிர்க்க வேண்டும். அவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது வயிற்றுக்கு தீங்கு விளைவிக்கும். அஜீரணம், அசிடிட்டி மற்றும் செரிமான பிரச்சினைகள் ஏற்படலாம்.

6. குளிர் பானங்கள்

காலை வேளையில் குளிர்ச்சியாக ஏதாவது குடிக்கும்போது உடல், வெப்பநிலையை அதிகரிக்க கடினமாக உழைக்க வேண்டும். இதனால் தேவையற்ற ஆற்றல் இழப்பு ஏற்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com