

அம்பர்நாத்,
கல்யாண் நகரில் உள்ள கூட்டுறவு வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்றதாக கடக்பாடா போலீசில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. இந்த புகாரின் படி போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டு கடன் வாங்குவதற்கு கூட்டுறவு வங்கியில் போலி ஆவணங்களை செலுத்தி ரூ.6 கோடியே 30 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இந்த மோசடியில் 26 பேர் வீட்டுக்கடன் பெற்றவர்கள், 4 பேர் கட்டுமான அதிபர்கள், ஒரு ரியல் எஸ்டேட் ஆலோசகர் உள்பட 33 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் ரியல் எஸ்டேட் ஆலோசகர் தான் வீட்டுக்கடனுக்காக போலி ஆவணங்கள் தயாரித்து வந்ததாக தெரிவந்தது. இதன்பேரில் போலீசார் வங்கியில் போலி ஆவணங்கள் செலுத்திய 33 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.