கால்நடை தீவனத்துக்காக 650 கிலோ ரேஷன் அரிசியை காரில் கடத்தி வந்த பனியன் நிறுவன தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Published on

திருப்பூர்:

கால்நடை தீவனத்துக்காக 650 கிலோ ரேஷன் அரிசியை காரில் கடத்தி வந்த பனியன் நிறுவன தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காரில் ரேஷன் அரிசி மூட்டைகள்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே இச்சிப்பாளையம் பகுதியில் ரேஷன் அரிசியை பொதுமக்களிடம் இருந்து சிலர் வாங்கி மொத்தமாக விற்பனை செய்வதாக திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து காங்கேயம் இச்சிபாளையம் பிரிவு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 650 கிலோ ரேஷன் அரிசி சிறிய, சிறிய மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

பனியன் நிறுவன தொழிலாளி கைது

இதுதொடர்பாக காரில் வந்த காங்கேயம் மானூர் பள்ளநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த மகேஷ்குமார் (வயது 36) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பனியன் நிறுவன தொழிலாளியான இவர், காங்கேயம், மானூர், படியூர், இச்சிபாளையம் பகுதிகளில் உள்ள மக்களிடம் ரேஷன் அரிசியை வாங்கி பதுக்கி வைத்து மொத்தமாக கால்நடை தீவனத்துக்கு அதிக விலைக்கு தொடர்ந்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த கார் மற்றும் 650 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து மகேஷ்குமாரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com