கர்நாடகத்தில் இதுவரை 6,801 சூரியசக்தி மின் மோட்டார்கள் அமைப்பு; மின்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேச்சு

கர்நாடகத்தில் இதுவரை 6 ஆயிரத்து 801 சூரியசக்தி மின் மோட்டார்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மின்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் இதுவரை 6,801 சூரியசக்தி மின் மோட்டார்கள் அமைப்பு; மின்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேச்சு
Published on

பெங்களூரு:

கர்நாடகத்தில் இதுவரை 6 ஆயிரத்து 801 சூரியசக்தி மின் மோட்டார்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மின்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறியுள்ளார்.

பல்வேறு பயன்கள்

மின்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் தனது துறை அதிகாரிகள், சூரியசக்தி மின் மோட்டார் உற்பத்தி செய்யும் நிறுவன பிரதிநிதிகளுடன் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் அவர் பேசும்போது கூறியதாவது:-

விவசாய பம்புசெட்டுகளுக்கு சூரியசக்தி மின் மோட்டார்கள் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். இந்த திட்டத்தால் கர்நாடகத்தில் மின் சேமிப்பை ஏற்படுத்த முடியும். விவசாயிகள் மீதான சுமை குறையும். இந்த சூர்யசக்தி மின் மோட்டார்களை பயன்படுத்துவதால் விவசாயிகளுக்கு பல்வேறு பயன்கள் கிடைக்கும். பாசனத்திற்கு குறைந்த செலவில் விவசாயிகளுக்கு மின்சாரம் கிடைக்கும். இது சுற்றுச்சூழலுக்கு உகந்தது ஆகும்.

மானியம் வழங்குகின்றன

தற்போது விவசாய பம்புசெட்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி மானியம் வழங்கப்படுகிறது. சூரியசக்தி மின் மோட்டார்களை பயன்படுத்த தொடங்கினால் இந்த நிதி அரசுக்கு மிச்சமாகும். விவசாயிகளுக்கு மத்திய-மாநில அரசுகள் சார்பில் சூரியசக்தி மின் மோட்டார்கள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டம் கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கு மத்திய-மாநில அரசுகள் மானியம் வழங்குகின்றன.

இதற்கு மத்திய அரசு 30 சதவீதம் வழங்குகிறது. பயனாளர்கள் ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். மீதமுள்ள தொகையை மாநில அரசு வழங்குகிறது. பயனாளர்கள் தலித்-பழங்குடியினராக இருந்தால் அவர்கள் பணம் வழங்க தேவை இல்லை. கர்நாடகத்தில் இதுவரை 6 ஆயிரத்து 801 சூரியசக்தி மின் மோட்டார்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com