அரசியலுக்காகவே 75-வது பிறந்தநாள் கொண்டாட்டம்; சித்தராமையா பேட்டி

அரசியலுக்காகவே 75-வது பிறந்தநாள் கொண்டாட்டம் என சித்தராமையா கூறியுள்ளார்.
அரசியலுக்காகவே 75-வது பிறந்தநாள் கொண்டாட்டம்; சித்தராமையா பேட்டி
Published on

பெங்களூரு,:

பெங்களூருவில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

எனது 75-வது பிறந்தநாள் விழாவை தாவணகெரேயில் வருகிற ஆகஸ்டு மாதம் 3-ந் தேதி கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. எனது பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சியால் கொண்டாடப்படவில்லை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களால் கொண்டாடப்படுகிறது. விழா ஏற்பாடுகளை மேற்கொள்ள மகாதேவப்பா, சாமனூர் சிவசங்கரப்பா, ராஜண்ணா நியமிக்கப்பட்டுள்ளனர். எனது பிறந்த நாள் விழாவில் பங்கேற்கும்படி ராகுல்காந்தி, டி.கே.சிவக்குமார், மலலிகார்ஜுன கார்கே, கே.எச்.முனியப்பா உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவாகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனர்.

எனது 75-வது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று ஆதரவாளர்களும், தொண்டாகளும் விரும்புகின்றனர். 75-வது பிறந்தநாள் என்பதால், இது எனது வாழ்நாளின் புதிய மைல்கல் ஆகும். எனது பிறந்தநாள் விழா அரசியலுக்காக தான் கொண்டாடப்பட உள்ளது. எல்லாமே அரசியல் தான். நான் ஒன்றும் சன்னியாசி இல்லை. ராகுல்காந்தி, டி.கே.சிவக்குமார் நான் உள்ளிட்ட அனைவரும் அரசியல் தான் செய்கிறோம். பிறந்தநாள் விழா கொண்டாடுவதில் காங்கிரஸ் கட்சிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com