கொரோனாவுக்கு மேலும் 8 பேர் பலி

பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் கொரோனாவுக்கு மேலும் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு மேலும் 8 பேர் பலி
Published on

பெரம்பலூர்:

5 பேர் பலி

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 66 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 82 மற்றும் தலா 70 வயதுடைய முதியவர்கள் என 3 பேரும், 65, 60 வயதுடைய மூதாட்டிகள் 2 பேரும் என மொத்தம் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 178 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மட்டும் 136 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 457 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 885 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.

அரியலூர் மாவட்டத்தில்...

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் நேற்று 98 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 54, 44, 41 வயதுடைய ஆண்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 182 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 113 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 597 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com