ரூ.9 கோடியில் சாலை சீரமைக்கும் பணிகள்

புதுவை நெல்லித்தோப்பு, காமராஜ் நகர் தொகுதிகளில் ரூ.9 கோடியில் சாலை சீரமைக்கும் பணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
ரூ.9 கோடியில் சாலை சீரமைக்கும் பணிகள்
Published on

புதுச்சேரி

நெல்லித்தோப்பு, காமராஜ் நகர் தொகுதிகளில் ரூ.9 கோடியில் சாலை சீரமைக்கும் பணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

ரூ.9 கோடி ஒதுக்கீடு

புதுவை நெல்லித்தோப்பு தொகுதி, காமராஜ் நகர் தொகுதியில் பழுதடைந்துள்ள 44 ஆயிரத்து 360 மீட்டர் நீளமுள்ள சாலைகள் மற்றும் குறுக்கு சாலைகளை சீரமைக்கும் பணிக்காக ரூ.9 கோடியே 9 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற உள்ளது.

அதாவது நெல்லித்தோப்பு தொகுதி அண்ணா நகர், சத்தியாநகர், திருமால் நகர், ராஜராஜேஸ்வரி நகர், ரெயின்போ நகர், எழில்நகர், கிருஷ்ணா நகர், கருவடிக்குப்பம், சூரியகாந்திநகர், வசந்தநகர், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த பணிகள் நடைபெற உள்ளது.

பணிகள் தொடக்கம்

நெல்லித்தோப்பு தொகுதிக்கான பணிகளின் தொடக்க நிகழ்ச்சி காமராஜர் சாலையில் நடந்தது. அதுபோல் காமராஜ் நகர் தொகுதிக்கான பணிகள் தொடக்க நிகழ்ச்சி ரெயின்போ நகரில் நடந்தது.

இரு நிகழ்ச்சிகளிலும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், ரிச்சர்ட், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் வல்லவன், உதவி பொறியாளர் பார்த்தசாரதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com