ரூ.9½ கோடியில் குடிநீர் குழாய், சாலை வசதி

அரியாங்குப்பம், முதலியார்பேட்டை தொகுதிகளில் ரூ.9½ கோடியில் குடிநீர் குழாய் மற்றும் சாலை வசதி பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
ரூ.9½ கோடியில் குடிநீர் குழாய், சாலை வசதி
Published on

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம், முதலியார்பேட்டை தொகுதிகளில் ரூ.9 கோடியில் குடிநீர் குழாய் மற்றும் சாலை வசதி பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

குடிநீர் குழாய், சாலை வசதி

அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட முருங்கப்பாக்கத்தில் விடுபட்ட பகுதியான வில்லியனூர் ரோட்டின் தெற்கு பகுதி, கணபதி நகர், சேத்திலால் நகர், குபேரன் நகர், கோவிந்தராஜன் நகர், வரதராசு நகர், மகாலட்சுமி நகர், முத்துலட்சுமி நகரின் அனைத்து உள்ள வீதிகளுக்கும் துருப்பிடிக்காத குடிநீர் குழாய் அமைத்து, சாலைகளை மறு சீரமைப்பு செய்வதற்காக அம்ரூத் திட்டத்தில் ரூ.5 கோடியே 98 லட்சம் மதிப்பீட்டிலான பணிகள் முருங்கபாக்கம் கலை மற்றும் கைவினை கிராமம் அருகில் நேற்று தொடங்கியது.

முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட முருங்கப்பாக்கம் சுதானா நகர் ஆர்ச்சில் இருந்து அரவிந்த் நகர், அங்காளம்மன் நகர் வழியாக முருங்கப்பாக்கம்-நாட்டார் தெரு, பள்ளத்தெரு ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து வீதிகளுக்கும் தார்சாலை அமைக்க சிட்பி வங்கி நிதி உதவியுடன் ரூ.3 கோடியே 36 லட்சம் செலவில் குடிநீர் குழாய் அமைத்தல் ஆகிய பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடந்தது.

ரங்கசாமி தொடங்கி வைத்தார்

இந்த இரு நிகழ்ச்சிகளிலும் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு குடிநீர் குழாய் மற்றும் சாலைப்பணிகளை பூமி பூஜை செய்து  தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், சம்பத், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பழனியப்பன், கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், உதவி பொறியாளர் வாசு, இளநிலை பொறியாளர் தணிகைவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com