அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்தடைந்த உலகின் மிகப்பெரிய பூட்டு- எத்தனை கிலோ தெரியுமா?


அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்தடைந்த உலகின் மிகப்பெரிய பூட்டு- எத்தனை கிலோ தெரியுமா?
x

6 மாதங்களில் தயாரிக்கப்பட்ட இந்த பூட்டு 10 அடி உயரமும் 4.5 அடி அகலமும் கொண்டது.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட பல முக்கிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். ராமர் கோவில் திறக்கப்படுவதையொட்டி, பல்வேறு ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கோவில் கும்பாபிஷேகத்திற்கான 7 நாட்கள் பூஜையானது கடந்த 16-ம் தேதி தொடங்கியது.

இந்த விழாவை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலுக்கு பரிசுப் பொருட்களையும், நன்கொடைகளையும் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், 400 கிலோ எடையுள்ள பூட்டு மற்றும் சாவி அலிகாரில் இருந்து அயோத்திக்கு வந்தடைந்தன. இந்த பூட்டு இந்து மகா சபா சார்பில் அயோத்தி ராமர் கோவிலுக்கு பரிசாக வழங்கப்பட்டது.

இந்த பூட்டானது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே அலிகாரை சேர்ந்த வயதான கைவினைக் கலைஞர் சத்யா பிரகாஷ் ஷர்மாவால் உருவாக்கப்பட்டது. சத்ய பிரகாஷ் ஷர்மா சமீபத்தில் காலமானார், அயோத்தி ராமர் கோவிலுக்கு இந்த பூட்டை பரிசாக வழங்க வேண்டும் என்பதுதான் அவரின் கடைசி ஆசை என்று அவரது மனைவி ருக்மணி ஷர்மா தெரிவித்துள்ளார். 6 மாதங்களில் தயாரிக்கப்பட்ட இந்த பூட்டு 10 அடி உயரமும் 4.5 அடி அகலமும் கொண்டது. இது உலகின் மிக பெரிய பூட்டு என்ற சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.


Next Story