சினிமா செய்திகள்

ஆட்டோ டிரைவர்களுக்கு நடிகர் விஜய் உதவி + "||" + Auto drivers Actor Vijay help

ஆட்டோ டிரைவர்களுக்கு நடிகர் விஜய் உதவி

ஆட்டோ டிரைவர்களுக்கு நடிகர் விஜய் உதவி
நடிகர் விஜய் ஆண்டுதோறும் மே தினத்தில் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் உதவிப்பொருட்கள் வழங்குவது வழக்கம். இந்த வருடம் தேர்தல் நடந்ததால் திட்டமிட்டபடி நடக்கவில்லை.
தற்போது தேர்தல் முடிந்து நடத்தை விதிகள் தளர்த்தப்பட்ட நிலையில் ஆட்டோ டிரைவர்களுக்கு உணவு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினார்.

இதற்காக சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு 1000 ஆட்டோ டிரைவர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கு பிரியாணி உணவு வழங்கப்பட்டன. சில்வர் குடமும் பரிசாக அளிக்கப்பட்டது.


விஜய் படப்பிடிப்பில் தீவிரமாக இருந்ததால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமுடியவில்லை. எனவே அவர் சார்பில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டு பரிசுப்பொருட்களை வழங்கினார். விஜய் தற்போது அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இது அவருக்கு 63-வது படம் ஆகும். நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தில் விஜய், பெண்கள் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. படத்தின் தலைப்பை அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அடுத்த மாதம் 22-ந்தேதி விஜய் பிறந்த நாளையொட்டி படத்தின் தலைப்பையும் விஜய் தோற்றத்தையும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.