சினிமா செய்திகள்

திடீர் மூச்சுத்திணறல் நடிகர் கார்த்திக் ஆஸ்பத்திரியில் அனுமதி + "||" + Sudden suffocation actor Karthik admitted to hospital

திடீர் மூச்சுத்திணறல் நடிகர் கார்த்திக் ஆஸ்பத்திரியில் அனுமதி

திடீர் மூச்சுத்திணறல் நடிகர் கார்த்திக் ஆஸ்பத்திரியில் அனுமதி
நடிகர் கார்த்திக் சென்னை போயஸ் கார்டனில் வசித்து வருகிறார். அவருக்கு திடீரென முச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அடையாறு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
நடிகர் கார்த்திக் சென்னை போயஸ் கார்டனில் வசித்து வருகிறார். அவருக்கு திடீரென முச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அடையாறு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கார்த்திக்குக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இல்லை என்று வந்துள்ளது. நடிகர் கார்த்திக் தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 1990-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தார். தற்போது படங்களில் அவர் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். மனித உரிமை காக்கும் கட்சி என்ற பெயரிலான அரசியல் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு தனது கட்சி அ.தி.மு.க கூட்டணியில் தொடர்வதாகவும், சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்து இருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி மெட்ரோ ரெயிலில் 100% இருக்கைகளில் பயணிகள் அமர அனுமதி
டெல்லி மெட்ரோ ரெயிலில் 100% இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
2. 20 மாதங்களுக்கு பிறகு வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி அளித்த அமெரிக்கா...!
முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு பயணிகளை அமெரிக்கா அனுமதிக்க தொடங்கியுள்ளது.
3. நடிகர் பாலகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதி
பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
4. தொழிலதிபரை கடத்தி சொத்துகளை எழுதி வாங்கிய வழக்கு: போலீஸ் அதிகாரிகளின் முன்ஜாமீன் மனுவை திரும்ப பெற அனுமதி
தொழிலதிபரை குடும்பத்துடன் கடத்திச்சென்று சொத்துகளை எழுதி வாங்கிய வழக்கில் போலீஸ் அதிகாரிகளுக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. இதையடுத்து முன்ஜாமீன் மனு போலீஸ் அதிகாரிகள் தரப்பில் திரும்ப பெறப்பட்டது.
5. தமிழ்நாடு முழுவதும் தீபாவளியன்று இறைச்சி கடைகளை திறக்க அனுமதி - தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு முழுவதும் தீபாவளியன்று இறைச்சி கடைகளை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.