கொரோனாவில் இருந்து தப்பிக்க பூஜா ஹெக்டே யோசனை


கொரோனாவில் இருந்து தப்பிக்க பூஜா ஹெக்டே யோசனை
x
தினத்தந்தி 1 May 2021 2:55 AM GMT (Updated: 2021-05-01T08:25:45+05:30)

தமிழில் முகமூடி படத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே, தற்போது விஜய் ஜோடியாக புதிய படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

உடற்பயிற்சிகள், யோகா மற்றும் உணவு முறைகள் மூலம் உடல்நலம் தேறி இருக்கிறார். யோகா செய்யும் வீடியோவையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு கொரோனாவில் இருந்து தப்பிக்க ஆலோசனைகள் வழங்கி உள்ளார்.

பூஜா ஹெக்டே கூறும்போது, “கொரோனா காலத்தில் அனைவரும் முக கவசம் அணிவது அவசியம். அடிக்கடி கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்யவேண்டும். ஆவி பிடிப்பதும் முக்கியம். நான் தினமும் இரண்டு முறை தவறாமல் ஆவி பிடிக்கிறேன். வெந்நீர் குடித்தால் நல்லது. அதிகம் தண்ணீர் குடித்தால் உடலில் உள்ள தொற்றுகள் குறைய வாய்ப்பு இருக்கிறது. நான் தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்கிறேன்.

யோகா எல்லோரும் செய்யுங்கள். நான் பிரணாயாம பயிற்சி எடுக்கிறேன். இது உடலுக்கும், மனதுக்கும் ரொம்ப நல்லது. கொரோனாவில் இருந்தும் பாதுகாக்கும். நான் தினமும் செய்கிறேன். ஆரஞ்சு, சாத்துக்குடி பழங்கள் ஜூஸ் சாப்பிடுவது நல்லது. எல்லோரையும் விட்டு 6 அடி தள்ளி இருங்கள்’’ என்றார்.

Next Story