கொரோனா தொற்று பிரபல நடிகை ரேஷ்மா மரணம்


கொரோனா தொற்று பிரபல நடிகை ரேஷ்மா மரணம்
x
தினத்தந்தி 21 Jun 2021 8:13 PM GMT (Updated: 2021-06-22T01:43:47+05:30)

சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என்று வந்தது.

பிரபல நடிகை ரேஷ்மா, சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என்று வந்தது. ஆனாலும் ரேஷ்மாவுக்கு மூச்சு திணறல் இருந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று மாலை மரணம் அடைந்தார் அவருக்கு வயது 42. ரேஷ்மா தமிழில் கார்த்திக்குடன் கிழக்கு முகம் படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். பூமணி, மறவாதே கண்மணியே, நீ எந்தன் வானம், வடக்குப்பட்டி மாப்பிள்ளை, என்னை தாலாட்ட வருவாளா ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகனும், நடிகருமான ஹம்சவிர்தனை திருமணம் செய்து கொண்டு தனது பெயரை சாந்தி என்று மாற்றிக்கொண்டார். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

Next Story