தனுஷ் படத்தின் கதை கசிந்தது


தனுஷ் படத்தின் கதை கசிந்தது
x
தினத்தந்தி 13 Aug 2021 11:13 AM GMT (Updated: 2021-08-13T16:43:28+05:30)

தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து மித்ரன் ஜஹகர் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

தனுஷ் இந்தியில் அக்‌ஷய்குமாருடன் நடித்துள்ள அந்த்ராங்கி ரே திரைக்கு வர தயாராக உள்ளது. தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அடுத்து மித்ரன் ஜஹகர் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது தனுசுக்கு 44-வது படம். இந்த படத்தை முடித்துவிட்டு பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா டைரக்டு செய்யும் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் கதை சமூக வலைத்தளத்தில் கசிந்து விட்டதாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. படத்தின் கதை என்று வெளியான தகவலில் 1950 கால கட்டத்தில் நடப்பது போன்று உண்மை சம்பவங்கள் கொண்ட படமாக தயாராவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆந்திரா தனி மாநிலமாக பிரிவதற்கு முன்னால் தெலுங்கு பேசுபவர்களும், தமிழர்களும் மெட்ராஸ் மாகாணத்தில் ஒன்றாக வாழ்ந்ததையும், அப்போது நடந்த அரசியலையும், உரிமை போராட்டங்களையும் உள்ளடக்கிய படமாக தயாராகிறது என்றும் தனுஷ் ஏழை மக்களுக்காக போராடும் போராளி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் கசிந்த கதையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனாலும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை.

Next Story