திருட்டு இணையதளத்தில் வந்த நயன்தாரா படம்

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்கள் ஏற்கனவே தியேட்டர்களில் வெளியான உடனேயே திருட்டு இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தின.
திருட்டு இணையதளத்தில் வந்த நயன்தாரா படம்
Published on

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்கள் ஏற்கனவே தியேட்டர்களில் வெளியான உடனேயே திருட்டு இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தின.

இதனை தடுக்க தியேட்டர்களில் கேமரா கொண்டு செல்ல தடை விதித்தும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும் பயன் இல்லை. கொரோனா காரணமாக தற்போது ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் படங்களையும் பிரதி எடுத்து திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிடுகிறார்கள்.

ஓ.டி.டி.யில் வெளியான சூர்யாவின் சூரரை போற்று படத்தை ஏற்கனவே திருட்டு இணையதளத்தில் வெளியிட்டனர். தற்போது நயன்தாரா பார்வையற்றவராக நடித்து ஓ.டி.டி. தளத்தில் வெளியான நெற்றிக்கண் படத்தையும் ஹெச்.டி. தரத்தில் திருட்டு இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர். இதனால் நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் அதிர்ச்சியாகி உள்ளனர்.

இதுபோல் இந்தியில் அஜய்தேவ்கான், சஞ்சய்தத், சோனாக்சி சின்ஹா ஆகியோர் நடித்து ஓ.டி.டி. தளத்தில் வெளியான புஜ்: தி பிரைடு ஆப் இந்தியா' போர் படமும் ஓ.டி.டி.யில் ரிலீசான உடனேயே திருட்டு இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com