உச்சத்தை நோக்கி வரலட்சுமி சரத்குமார்


உச்சத்தை நோக்கி வரலட்சுமி சரத்குமார்
x
தினத்தந்தி 15 Aug 2021 7:23 AM GMT (Updated: 2021-08-15T12:53:36+05:30)

வரலட்சுமி சரத்குமார் புகழின் உச்சத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறார்.

வரலட்சுமி சரத்குமார், 2012-ல் வெளிவந்த ‘போடா போடி’ படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். தாரை தப்பட்டை, சர்கார், சண்டக்கோழி ஆகிய படங்களின் மூலம் பிரபலமானார். தற்போது, ‘பிறந்தால் பராசக்தி,’ ‘கலர்ஸ்’ உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் 6 படங்களிலும், கன்னடத்தில் 5 படங்களிலும், மலையாளத்தில் 2 படங்களிலும் நடித்து இருக்கிறார். தெலுங்கில் இவர் நடித்த 6 படங்களும் ‘சூப்பர் ஹிட்.’ வரிசையாக வெற்றி படங்களை கொடுத்ததால், அவருடைய மார்க்கெட் அந்தஸ்து உயர்ந்து இருக்கிறது.

தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் வரலட்சுமி சரத்குமார், அங்கே புகழின் உச்சத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறார். அவருடைய சம்பளமும் ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.90 லட்சமாக உயர்ந்து இருக்கிறதாம்.

Next Story