ஹாலிவுட்டில் டைரக்டராக அறிமுகமாகிறார் சுஜா!


ஹாலிவுட்டில் டைரக்டராக அறிமுகமாகிறார் சுஜா!
x
தினத்தந்தி 15 Aug 2021 7:56 AM GMT (Updated: 2021-08-15T13:26:43+05:30)

பிரபல டான்ஸ் மாஸ்டர் ரகுராம் மூத்த மகள் சுஜா ரகுராம் ஹாலிவுட்டில் டைரக்டராக அறிமுகமாகிறார்.

பிரபல டான்ஸ் மாஸ்டர் ரகுராமுக்கு 2 மகள்கள். இளைய மகள் காயத்ரி ரகுராம் சில படங்களில் நடித்தார். இப்போது, டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்து வருவதுடன், அரசியலில் ஈடுபட்டு பா.ஜ.க.வின் பேச்சாளராக இருக்கிறார். மூத்த மகள் சுஜா ரகுராம் திருமணத்துக்கு பின் கணவருடன் அமெரிக்காவில் குடியேறினார்.

அங்கு சில ஹாலிவுட் படங்களில் உதவி டைரக்டராக பணியாற்றினார். தற்போது அவர் ஒரு ஹாலிவுட் படத்தை தயாரித்து இயக்க இருக்கிறார். படத்துக்கு, ‘டேக் இட் ஈஸி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். இதில் ரகுராமின் பேரக்குழந்தைகள் திரிசூல் மனோஜ், சனா மனோஜ் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.

இசையை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.

Next Story