கிராமி விருது கோப்பையில் மது அருந்திய பிரபல பாடகர்... வைரலாகும் வீடியோ


கிராமி விருது கோப்பையில் மது அருந்திய பிரபல பாடகர்... வைரலாகும் வீடியோ
x

66-வது ஆண்டு கிராமி விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்சில் நேற்று நடந்தது.

சென்னை,

இசை உலகில் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் கிராமி விருதுகள் 1959-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதானது உலகம் முழுவதும் சிறந்த பாடல், ஆல்பம், இசையமைப்பாளர்கள், பாடல் ஆசிரியர்கள் உள்ளிட்ட இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 66-வது ஆண்டு கிராமி விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்சில் நேற்று நடந்தது. இதில் இந்தியாவின் சக்தி ஆல்பத்திற்கு கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது. சங்கர் மகாதேவன், செல்வகணேஷ் விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன், ஜாகீர் உசேன் ஆகியோர் அடங்கிய இசைக்குழு இணைந்து உருவாக்கிய சக்தி ஆல்பத்தில் மொத்தம் 8 பாடல்கள் உள்ளன.

திஸ் மொமண்ட் ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள சக்தி இசைக்குழுவின் பாடல்களுக்கு உலகின் சிறந்த ஆல்பம் பிரிவில் கிராமி விருது கிடைத்துள்ளது. விருதுபெற்ற சக்தி இசைக்குழுவுக்கு திரையுலகினர் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல அமெரிக்கா ராப் இசைக் கலைஞரான ஜெய் இசட்டுக்கு இசைத் துறையில் தனிப்பட்ட மற்றும் தொழில் முறை சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இம்பாக்ட் விருது வழங்கப்பட்டது. விருதை மகள் புளு ஜவியை மேடையில் அழைத்து சென்று ஜெய் இசட் பெற்றுக் கொண்டார். விருது பெற்ற மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக சக நண்பர்களுடன் தான் பெற்றுக் கொண்ட விருது கோப்பையில் மது ஊற்றி அருந்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story