பெண் டைரக்டரின் திகில் கதை


பெண் டைரக்டரின் திகில் கதை
x

பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஐசுஜான்சி என்ற பெண் `நாவல்' என்ற படம் மூலம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டராக அறிமுகமாகிறார். இதில் அபிஷேக் ஜோசப்ராஜ், ஆதிரை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

படம் பற்றி இயக்குனர் ஐசுஜான்சி கூறும்போது, "நிஜத்தை இந்த உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களும், நாம் நிஜமானவையே என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் அந்த நிஜத்தை மாற்றும் ஒரு எண்ணமே நிஜமான எண்ணம் என்பதை படத்தின் மையக்கருவாக வைத்து இந்தப் படம் தயாராகிறது.

திகிலுடன், விறுவிறுப்பு, பர பரப்பு என அனைத்தும் நீக்கமற நிறைந்திருக்குமாறு திரைக்கதை அமைத்துள்ளேன்'' என்றார். ஊட்டியில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இந்தப் படத்தை அருணாசல குமார் தயாரிக்கிறார். இசை: ரகுநாத், ஒளிப்பதிவு: வசந்தகுமார்.


Next Story