தற்கொலைக்கு எதிரான கதை

தற்கொலைக்கு எதிரான கதை
Published on

'யோசி' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் அபய் சங்கர் நாயகனாகவும் ரேவதி வெங்கட் நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர் மும்பையை சேர்ந்த விளையாட்டு வீராங்கனை ஆவார். ஊர்வசி, கலா ரஞ்சனி ஆகியாருடன் அர்ச்சனா கவுதம், சாம் ஜீவன், ஏ.எல்.சரண், பார்கவ் சூர்யா, மயூரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை ஸ்டீபன் எம்.ஜோசப் டைரக்டு செய்துள்ளார். படம் குறித்து அவர் கூறும்போது, ``நீட் தேர்வை எதிர்கொள்ள பயந்த ஒரு மாணவன் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்து மலைப்பகுதிக்கு செல்கிறான். அவன் முயற்சி தோல்வி அடைகிறது. பிறகு அந்த காட்டில் இருந்து தப்பிக்க மிகப்பெரிய உயிர்போராட்டத்தில் இறங்குகிறான்.

அவனுக்கு என்ன ஆபத்து நேர்ந்தது. அதில் இருந்து அந்த மாணவனால் தப்பிக்க முடிந்ததா? என்பதை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி உள்ளது, மலைப்பகுதியில் தினமும் நான்கு கிலோ மீட்டர் நடந்து சென்று படப்பிடிப்பை நடத்தினோம்'' என்றார். இந்தப் படத்தில் ஊர்வசியும் அவரது சகோதரி கலாரஞ்சனியும் சுமார் 15 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ராபின் ராஜசேகர், கே.குமார், வி.அருண், ஏ.எஸ்.விஜய் ஆகிய நான்கு பேர் இசை அமைத்துள்ளனர். ஒளிப்பதிவு: ஆறுமுகம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com