விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் அஜித் இரங்கல்

துபாயில் இருப்பதால் நேரில் பங்கேற்க முடியவில்லை என நடிகர் அஜித் வேதனை தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் அஜித் இரங்கல்
Published on

சென்னை,

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். தற்போது விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் அஜித் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரேமலதா மற்றும் சுதீஷிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார். மேலும் துபாயில் இருப்பதால் நேரில் பங்கேற்க முடியவில்லை என நடிகர் அஜித் வேதனை தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com