திருப்பதி கோவிலில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினார் நடிகர் தனுஷ்..!!

திருப்பதி கோவிலில் நடிகர் தனுஷ் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார்.
திருப்பதி கோவிலில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினார் நடிகர் தனுஷ்..!!
Published on

திருப்பதி,

நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திற்காக நடிகர் தனுஷ் தாடி, மீசை, நீண்ட முடியுடன் நடித்து வந்த நிலையில், தன்னுடைய காட்சிகளை அவர் முடித்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் திருப்பதி கோவிலுக்கு தனது பெற்றோர் மற்றும் மகன்கள் யாத்ரா - லிங்காவுடன் சென்று மொட்டை அடித்து நேர்த்திக்கடனை செலுத்தி உள்ளார். இது குறித்த சில வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் தனுஷ் அடுத்ததாக 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' போன்ற படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்யின் புதிய படத்தில் இணைந்துள்ளார்.

கலர் எல்லோ புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்திற்கு "தேரே இஸ்க் மேன்" (Tere Ishk Mein) என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், "தேரே இஸ்க் மேன்" திரைப்படம் 2024-ஆம் ஆண்டு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com