மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு
Published on

கோலாலம்பூர்,

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். இது தொடர்பான புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் "அதிகாரபூர்வ பணிகளுக்கு மத்தியில், இந்தியாவின் பிரபல கலைஞரும் 'சூப்பர் ஸ்டாருமான' கமல்ஹாசனுடன் பேச எனக்கு நேரம் கிடைத்தது.

இந்த 30 நிமிட சந்திப்பில் ஊழலுக்கு எதிரான கண்டிப்பு உள்ளிட்ட சினிமா துறை தொடர்பான கருத்துகளைப் பேசவும், பரிமாறிக்கொள்ளவும் வாய்ப்பு கிடைத்தது" என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், "டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் உங்களை சந்தித்து, பலதரப்பட்ட பிரச்சினைகள் குறித்த அறிவார்ந்த விவாதம் செய்ததில் மகிழ்ச்சி.

நமது நாடுகளுக்கிடையேயான இருதரப்பு உறவுகள் பற்றிய உங்கள் கருத்துகளைக் கேட்டு, சினிமாவின் முக்கியப் பங்கு மற்றும் சமூகத்தில் ஊழலுக்கு எதிரான கடுமையான சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறை குறித்து உங்களுடன் ஒத்துப்போவதில் நான் மகிழ்ச்சியடைந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com