நடிகர் வெங்கல் ராவ் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் அளித்து பாலா உதவி


நடிகர் வெங்கல் ராவ் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் அளித்து பாலா உதவி
x

உடல்நிலை சரியில்லாமல் கஷ்டப்படும் காமெடி நடிகர் வெங்கல் ராவுக்கு, நடிகர் சிம்புவைத் தொடர்ந்து "கலக்கப்போது யாரு" பாலாவும் ரூ.1 லட்சம் கொடுத்து அவருக்கு உதவியுள்ளார்.

காமெடி நடிகர் வெங்கல் ராவ் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனக்கு சினிமா கலைஞர்கள் நிதியுதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் நடிகர் சிம்பு 2 லட்சம் ரூபாய், ஐஸ்வர்யா ராஜேஷ் 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி செய்ததாகவும் மேலும் சிலர் நிதி உதவி செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் பாலா இந்த வீடியோவை பார்த்ததும் உடனடியாக அவருக்கு ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி செய்ததாக வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வெங்கல்ராவ் கூகுள் பே நம்பரை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் என்றும் அவர் வேண்டுகோள் எடுத்துள்ளார். மேலும் வெங்கல் ராவ் அவர்கள் மறுபடியும் முழுமையாக குணமடைந்து அவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றும் அவரை திரையில் பார்க்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் என்றும் அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.

பாலாவின் கோரிக்கையை ஏற்று அவருடைய பாலோயர்கள் மற்றும் அந்த வீடியோவை பார்த்தவர்கள் வெங்கல் ராவுக்கு தங்களால் முடிந்த பணத்தை அனுப்பி வருவதாக கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

1 More update

Next Story