நான் என்ன பதிவு போட்டாலும்... வலைதள அவதூறால் அடா சர்மா வருத்தம்


நான் என்ன பதிவு போட்டாலும்... வலைதள அவதூறால் அடா சர்மா வருத்தம்
x

சமூக வலைதளத்தில் தான் என்ன பதிவு போட்டாலும் கேலி செய்வதாக அடா சர்மா கூறினார் .

சென்னை,

'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி தமிழில் அறிமுகமானவர் அடா சர்மா. சார்லி சாப்ளின் 2-ம் பாகம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். சர்ச்சையில் சிக்கிய கேரளா ஸ்டோரி படத்தில் நடித்தும் பரபரப்பு ஏற்படுத்தினார்.

தற்போது நக்சலைட்டுகள் கதையை மையமாக வைத்து தயாரான 'பஸ்தர் த நக்சல் ஸ்டோரி' என்ற படத்திலும் நடித்து இருக்கிறார். இந்த படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் நடித்ததற்காக கடுமையான அவதூறுகளையும் கேலிகளையும் எதிர்கொண்டதாக தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அடா சர்மா கூறுகையில், "பஸ்தர் படத்தில் நான் நடிப்பதாக அறிவித்ததும் என்னை பலரும் குறிவைத்து மோசமாக பேச தொடங்கினர். சிலர் படத்தை பார்க்காமலேயே இழிவாக பேசினர். சமூக வலைதளத்தில் நான் என்ன பதிவு போட்டாலும் கேலி செய்தனர்.

அழகான மலர்களின் புகைப்படத்தை வைத்தாலும் ஆபாசமாக கருத்து பதிவிட்டனர். விலைமாது என்றும் கேவலமாக பேசினர். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்'' என்றார்.

1 More update

Next Story