அஜித் பட நடிகை காதல் முறிவு


அஜித் பட நடிகை காதல் முறிவு
x

அஜித்தின் வலிமை படத்திலும் கதாநாயகியாக நடித்த ஹூமா குரேஷி முடாசர் அஜிசுடனான காதலை முறித்து விட்டதாக இந்தி திரையுலகில் தகவல் பரவி உள்ளது.

தமிழில் ரஜினிகாந்தின் காலா படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஹூமா குரேஷி. தொடர்ந்து அஜித்தின் வலிமை படத்திலும் கதாநாயகியாக நடித்து இருந்தார். இந்தியில் பிரபல நடிகையாக இருக்கிறார். தற்போது டபுள் எக்ஸ்எல், டர்லா ஆகிய இந்தி படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் டபுள் எக்ஸ்எல் படத்தை முடாசர் அஜிஸ் என்பவருடன் இணைந்து ஹூமா குரேஷி தயாரித்து இருந்தார். ஹூமா குரோஷிக்கும், முடாசருக்கும் நெருக்கம் ஏற்பட்டு கடந்த 3 வருடங்களாக காதலித்தனர். இருவரும் ஜோடியாக எடுத்த புகைப்படங்களையும் வலைத்தளத்தில் பகிர்ந்து காதலை உறுதிப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் தற்போது முடாசர் அஜிசுடனான காதலை ஹூமா குரேஷி முறித்து விட்டதாக இந்தி திரையுலகில் தகவல் பரவி உள்ளது. ஆனாலும் தொடந்து நண்பர்களாக இருந்து படங்கள் தயாரிக்க முடிவு செய்து இருக்கிறார்களாம். முடாசர் ஏற்கனவே நடிகை சுஷ்மிதாவை காதலித்து 2010-ல் அவரை பிரிந்து விட்டார்.

1 More update

Next Story