'அரண்மனை 4' படம் வெளியாகும் தேதி அறிவிப்பு... முதல் பாடலும் வெளியானது

சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் உருவாகி உள்ளது.
'அரண்மனை 4' படம் வெளியாகும் தேதி அறிவிப்பு... முதல் பாடலும் வெளியானது
Published on

சென்னை,

சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அரண்மனை 3'. இந்த படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்சி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருந்த இப்படத்தை உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் முந்தைய மூன்று பாகங்களில் நடித்துள்ள சுந்தர்.சி இந்த பாகத்திலும் நடித்துள்ளார். மேலும் இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது.

இந்த நிலையில், படம் வெளியாகும் தேதியை படக்குழு இன்று காலை அறிவித்துள்ளது. அதன்படி, அரண்மனை 4 படம் வருகிற 26-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 'அச்சச்சோ' என்ற முதல் பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலில் தமன்னாவும் ராஷி கண்ணாவும் நடனமாடி அசத்தியுள்ளனர். தற்போது இந்த பாடல்  வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com