அருள்நிதி நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு..!

அருள்நிதி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
அருள்நிதி நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு..!
Published on

சென்னை,

நடிகர் அருள்நிதி தற்போது 'ராட்சசி' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான சை கவுதமராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சந்தோஷ் பிரதாப், சாயா தேவி, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு 'கழுவேத்தி மூர்க்கன்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதனை நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் பாண்டிராஜ் தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த திரைப்படம் ராமநாதபுரம், சிவகங்கை, ராமேஸ்வரம் மற்றும் விருதுநகர் உள்ளிட்ட இடங்களிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com