'தெறி' படத்தின் இந்தி ரீமேக்கில் வருண் தவான்?


தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் வருண் தவான்?
x

விஜய் நடித்த 'தெறி' படத்தின் இந்தி ரீமேக்கில் வருண் தவான் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து 2016-ல் வெளியான 'தெறி' படம் நல்ல வசூல் பார்த்தது. இதில் சமந்தா, ராதிகா சரத்குமார், எமி ஜாக்சன், மனோபாலா, மறைந்த டைரக்டர் மகேந்திரன் ஆகியோரும் நடித்து இருந்தனர். தெறி படம் இந்தியில் ரீமேக் ஆக இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்து வந்தன. விஜய் கதாபாத்திரத்தில் வருண் தவான் நடிக்கலாம் என்றும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில் தெறி படம் இந்தியில் ரிமேக் ஆவதும் அதில் வருண் தவான் நடிக்க இருப்பதும் தற்போது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. அட்லியே தெறி இந்தி ரீமேக்கை இயக்க இருக்கிறார். தற்போது ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தை அட்லி டைரக்டு செய்து வருகிறார். இந்த பட வேலைகள் முடிந்ததும் இந்தி தெறி படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.

வருண் தவான் நடிப்பில் சமீபத்தில் வந்த படங்கள் எதுவும் பெரிய வரவேற்பை பெறவில்லை. தெறி படத்தை பார்த்ததும் அவருக்கு பிடித்து போனதால் தனது மார்க்கெட்டை மீண்டும் தூக்கி நிறுத்த உதவும் என்ற நம்பிக்கையில் அதன் இந்தி ரீமேக்கில் நடிக்க சம்மதித்து இருப்பதாக கூறப்படுகிறது.


Next Story