டொவினோ தாமஸின் அடுத்த திரைப்படம் 'அவரன்'


டொவினோ தாமஸின் அடுத்த திரைப்படம் அவரன்
x

‘அவரன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள டொவினோ தாமஸின் படத்தை அறிமுக இயக்குநர் ஷில்பா இயக்குகிறார்.

மலையாள திரையுலகில் இளம் முன்னணி நடிகராக வலம் வருபவர் டொவினோ தாமஸ். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழில், தனுஷ் நடித்த மாரி 2 படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான மின்னல் முரளி, 2018 ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றது. 2018- என்ற படத்தில் இவரின் கதாபாத்திரம் அனைவரது மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்படட் இத்திரைப்படம், டொவினோ தாமஸின் பெயர் சொல்லும் படமாக அமைந்தது.

இதைத் தொடர்ந்து, அவரது நடிப்பில் நடிகர் என்ற திரைப்படம் வெளியானது. டிரைவிங் லைசென்ஸ் என்ற படத்தின் மூலம் பிரபலம் அடைந்த இயக்குநர் லால் ஜெ இப்படத்தை இயக்கினார். இந்த படத்தில் பாவனா, சௌபின் சாகிர் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வௌியானது. அடுத்து ஐடன்டிடி என்ற திரைப்படத்தில் டொவினோ தாமஸ் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இப்படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், டொவினோ தாமஸ் நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வௌியாகி இருக்கிறது. 'அவரன்'என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷில்பா இயக்குகிறார். போர்த்தொழில் படத்திற்கு இசை அமைத்த ஜேக்ஸ் பெஜாய் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.


Next Story