'பார்டர் 2': சன்னி தியோலுடன் இணைந்த பிரபல நடிகர்

கடந்த 1997-ம் ஆண்டு 'பார்டர்' படத்தின் முதல் பாகம் உருவானது.
'பார்டர் 2': சன்னி தியோலுடன் இணைந்த பிரபல நடிகர்
Published on

சென்னை,

பிரபல பாலிவுட் இயக்குனர் ஜே.பி.தத்தா இயக்கத்தில் கடந்த 1997-ம் ஆண்டு வெளியான போர் திரைப்படம் பார்டர். இப்படத்தில் சன்னி தியோல், சுனில் ஷெட்டி, ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். ரூ. 10 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் இப்படம் வெளியாகி 27 வருடங்கள் ஆகின. அப்போது, இப்படத்தின் 2ம் பாகம் உருவாவதாக படக்குழு தெரிவித்தது. இதனை பிரபல இயக்குனர் அனுராக் சிங் இயக்குகிறார். இவர் பார்டர் 2, 'கேசரி', 'பஞ்சாப் 1984', 'ஜாட் & ஜுலியட்' மற்றும் 'தில் போலே ஹடிப்பா' போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர். மேலும், பார்டர் 2-ல் முதல் பாகத்தில் நடித்திருந்த சன்னி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தில் சன்னி தியோலுடன் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் இணைந்திருக்கிறார். இப்படம் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ம் தேதி வெளியாக உள்ளது. வருண் தவான் சமீபத்தில் 'ஸ்ட்ரீ 2' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். அதனைத்தொடர்ந்து, 'பேடியா 2', 'பேபி ஜான்' மற்றும் அவரது தந்தை இயக்கும் பெயரிடப்படாத திரைப்படம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com