எந்த நிலையிலும் வரலாம்... எந்த வயதிலும் வரலாம் - கவிஞர் வைரமுத்துவின் காதலர் தின டுவீட்


எந்த நிலையிலும் வரலாம்... எந்த வயதிலும் வரலாம் - கவிஞர் வைரமுத்துவின் காதலர் தின டுவீட்
x
தினத்தந்தி 14 Feb 2023 11:50 AM IST (Updated: 14 Feb 2023 11:51 AM IST)
t-max-icont-min-icon

காதலர் தினத்திற்கு வைரமுத்து கவிதையின் வாயிலாக வாழ்த்து கூறியுள்ளார்.

சென்னை,

ஆண்டு தோறும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம் (வாலன்டைன்ஸ் டே) கொண்டாடப்பட்டு வருகிறது.சமீப காலமாக உலகம் முழுவதும் காதலர் தினம் திருவிழா போல் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று உலகம் முழுவதும் காதலர் தினத்தை கொண்டாடி வரும் நிலையில் காதலர் தினத்திற்கு வைரமுத்து கவிதையின் வாயிலாக வாழ்த்து கூறியுள்ளார்.

எந்த நிலையிலும் வரலாம் எந்த வயதிலும் வரலாம் அது ஒன்றல்ல ஒன்றிரண்டு மூன்று நான்கென்று எண்ணிக்கை ஏறலாம்.

ஆனால், என்னதான் அது என்ற இருதயத் துடிப்புக்கும், எப்போதுதான் நேரும் என்ற உடலின் தவிப்புக்கும் இடைவெளியில் நேருகின்ற துன்பம் குழைத்த இன்பம்தான் காதல் அந்த முதல் அனுபவம் வாழ்க. என பதிவிட்டுள்ளார்,

1 More update

Next Story