ஜெயித்தாரா ஜெயிலர்...? படம் எப்படி இருக்கு...? இதோ விமர்சனம்


ஜெயித்தாரா ஜெயிலர்...? படம் எப்படி இருக்கு...? இதோ விமர்சனம்
x
தினத்தந்தி 10 Aug 2023 6:13 AM GMT (Updated: 10 Aug 2023 6:24 AM GMT)

கர்நாடகாவில் இன்று காலை 6 மணிக்கு முதல் காட்சி வெளியானது.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் சுமார் 3500 திரையரங்குகளில். வெளியாகியுள்ளது. ரஜினி ரசிகர்கள் அப்படத்தை திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.

ஜெயிலர் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இதி ல் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

தமிழகத்தை தவிர, பிற மாநிலங்களில் அதிகாலையில் படம் வெளியானது. கர்நாடகாவில் இன்று காலை 6 மணிக்கு முதல் காட்சி வெளியானது.

தமிழகத்தில் காலை 9 மணிக்கு 'ஜெயிலர்' வெளியாகி உள்ளது. சென்னை, மதுரை, கோயம்புத்தூர், வேலூர், சேலம் மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளிலும் ஜெயிலர் படம் வெளியாகியுள்ளது. மதுரையில் சிறைக்கைதிகள் வேடம் அணிந்து ஜெயிலர் படம் பார்க்க ரசிகர்கள் வந்தனர்.

நடிகர் தனுஷ் தனது மாமனார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை சென்னையில் உள்ள ரோகிணி சில்வர் ஸ்க்ரீனில் பார்த்தார்.

ஜெயிலர் திரைப்படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த ரசிகர்கள் திரையரங்கம் முன் ஆடிப்பாடி கொண்டாடி மகிழ்ந்தனர். ஜெயிலர் படத்தின் முதல் காட்சி முடிவடைந்துள்ள நிலையில், அப்படத்தின் விமர்சனங்களை ரசிகர்கள் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். ஜெயிலர் படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை பார்க்கலாம்.

திரைப்பட விமர்சகர் ரமேஷ் பாலா, ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தை 4/5 என்று மதிப்பிட்டுள்ளார். "டைகர் முத்துவேல் பாண்டியனாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் முழுவதும் கம்பீரமாகவும், வீரமாகவும், இருக்கிறார். ஒரு நல்ல கதைக்களம் மற்றும் அற்புதமான இயக்கத்துடன் நெல்சனின் மறுபிரவேசம் என குறிப்பிட்டு உள்ளார்.

அமுதா பாரதி, ஜெயிலர் வின்னர். முதல் பாதி சூப்பராகவும், இரண்டாம் பாதி ஆவரேஜ் ஆகவும் உள்ளது. இது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஒன் மேன் ஷோ. இன்டர்வெல் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் புல்லரிக்கும். மோகன்லால் மற்றும் ஷிவ ராஜ்குமார் ரோல்களுக்கு நல்ல வரவேற்பு. அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது. நெல்சன் கம்பேக் கொடுத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்டோபர் கனகராஜ் : நல்ல காமெடி காட்சிகள், படத்தின் முதல் பாதி நன்றாக இருந்தது. இரண்டாம் பாதி ஆவரேஜ் தான். குறிப்பாக தமன்னா மற்றும் சுனில் வரும் காட்சிகள் போர். இருப்பினும் இரண்டாம் பாதியில் வரும் டைகர் பிளாஷ்பேக் மற்றும் மாஸான கிளைமாக்ஸ் காட்சிகள் படத்தை காப்பாற்றி உள்ளன. அனிருத்தின் பிஜிஎம் ஒலிக்க ஷிவ ராஜ்குமார் மற்றும் மோகன்லால் ஸ்லோ மோஷனில் நடந்து வரும் காட்சிகள் தெறிக்கவிட்டுள்ளன என பதிவிட்டுள்ளார்.

ஒரு டுவிட்டர் பயனர் ஜெயிலர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். மிகச்சிறந்த கிளைமாக்ஸ், அக்காட்சியை பார்த்தபோது புல்லரித்தது. ரசிகர்களின் இதயத்துடிப்பை அறிந்து வைத்துள்ளார் ரஜினி. நெல்சன் தேர்ந்தெடுத்த கதைக்களம் வேறலெவல் என பதிவிட்டுள்ளார்.

புளூ காபி: வாவ்... ரஜினி படம்னா இப்படிதான் இருக்கணும். இரண்டாம் பாதியில் ரஜினியின் பர்பார்மன்ஸ் அல்டிமேட். இதுவரை நெல்சன் எடுத்த படங்களில் இதுதான் சிறந்தது. ரஜினியின் மிரட்டலான நடிப்புக்கு அடுத்தபடியாக அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. நிச்சயம் பிளாக்பஸ்டர் ஹிட் என பதிவிட்டுள்ளார்.

திபன்ஜான் சட்டர்ஜி: முதல் பாதி சூப்பர், இரண்டாம் பாதி பிளாக்பஸ்டர். மொத்தத்தில் இது பிளாக்பஸ்டர் திரைப்படம். அனிருத் பிஜிஎம் வேறலெவல். ஹுகூம் பாடல் சும்மா தெறிக்குது. பிரம்மாண்ட வசூல் குவிக்கப்போகிறது என குறிப்பிட்டுள்ளார்.

பெலிஷியன்: துபாயில் ஜெயிலர் படம் பார்த்தேன். இது ரஜினி மற்றும் நெல்சன் இருவருக்குமே கம்பேக் படமாக அமைந்துள்ளது. ரஜினியின் முந்தைய பட சாதனைகளை இது முறியடிக்கும் என நினைக்கிறேன். ஜெயிலர் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

ஸ்பீடு பாண்டி :இப்படி ஒரு படத்தை எடுக்க நெல்சனால மட்டும்தான் முடியும். இனி நம்பர் ஒன் சூப்பர் ஒன்லாம் நெல்சன்தான். ரஜினிக்குப் பல வருசம் கழிச்சு ஒரு தரமான பிளாக்பஸ்டர். ஓபனிங் முன்ன பின்ன இருந்தாலும் இன்டர்வல் ப்ளாக் பைட்டுக்கு அப்றம் பாட்ஷாவைத் தூக்கி சாப்டுடுச்சு. அந்த பஞ்ச் வேறலெவல் என சிலாகித்து பதிவிட்டுள்ளார்.

டாக்டர் ராம்: பீஸ்ட் படத்தில் தான் எடுக்க நினைத்ததை எடுக்க முடியவில்லை என ஒரு பேட்டியில் தயங்கி தயங்கி சொல்லிருப்பார் நெல்சன். ஜெய்லரின் வெற்றி அதை உண்மையாக்கியிருக்கிறது என நெட்டிசன் ஒருவர் பதிவிட்டு இருக்கிறார்.

குமார் ஸ்வயம்: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், காமெடி காட்சிகள், கேமியோக்கள், இசை மற்றும் பிஜிஎம், திரைக்கதை ஆகியவை படத்திற்கு பாசிடிவ் ஆக அமைந்துள்ளன. முதல் பாதி சற்று மெதுவாக நகர்வது மட்டுமே நெகடிவ் ஆக உள்ளது. மொத்தத்தில் ரஜினிக்கு சிறந்த படமாக ஜெயிலர் அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.


Next Story