'புஷ்பா 2' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்?

பிரபல கிரிக்கெட் வீரர் 'புஷ்பா 2' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Cricketer who will make a special appearance in 'Pushpa 2'?
Published on

சென்னை,

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் புஷ்பா தி ரைஸ் . இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகி வருகிறது.

சமீபத்தில் 'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் பாடல்களில் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலாகின. இப்படம் கடந்த மாதம் 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்பில் சில தாமதங்கள் ஏற்பட்டதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

பின்னர், 'புஷ்பா 2 தி ரூல்' படம் வருகிற டிசம்பர் 6-ந் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்தனர். இந்நிலையில், பிரபல கிரிக்கெட் வீரர் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான டேவிட் வார்னர் ஆக்சன் காட்சியில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கின்றனர். ஆனால், இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com