'தேவரா' படத்தின் 3-வது பாடலான 'தாவுடி' வெளியாகும் தேதி அறிவிப்பு

‘தேவரா’ படத்தின் 3-வது பாடலான 'தாவுடி' வீடியோ பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
'Devara' 3rd song 'Daavudi' release date announced
Published on

சென்னை,

நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் 30-வது படத்தை இயக்குனர் கொரட்டலா சிவா இயக்குகிறார். இப்படத்துக்கு 'தேவரா பாகம்-1' என்று பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் சாயிப் அலிகான், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் மிக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் படத்தின் இறுதி கட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில், இப்படத்தின் 2 பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன. விரைவில் 3-வது பாடலான 'தாவுடி' வெளியாகும் என்று அனிருத் அப்டேட் கொடுத்திருந்தார். இந்நிலையில், 'தாவுடி' பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த வீடியோ பாடல் வரும் 4-ம் தேதி வெளியாக உள்ளது. மேலும் இப்படம் வருகிற 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com