பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் காலமானார்

ஸ்டார் வார்ஸ் படங்களில் வரும் டார்த் வேடர் என்ற வில்லன் கதாபாத்திரத்திற்கு ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் குரல் கொடுத்திருக்கிறார்.
Famous Hollywood actor James Earl Jones passed away
Published on

வாஷிங்டன்,

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ். இவர் ஸ்டார் வார்ஸ் படங்களில் வரும் டார்த் வேடர் என்ற வில்லன் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்ததற்காக மிகவும் அறியப்பட்டவர். மேலும், 90களில் வெளியான லயன் கிங் படங்களில் முபாசா கதாபாத்திரத்திற்கும் ஜேம்ஸ் குரல் கொடுத்திருக்கிறார்.

இவர் பீல்ட் ஆப் ட்ரீம்ஸ், கோனன் தி பார்பேரியன், கம்மிங் டு அமெரிக்கா மற்றும் பல படங்களில் நடித்தும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இதனையடுத்து இவரை கவுரவிக்கும் விதமாக கடந்த 2011ம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருதை ஆஸ்கர் அகாடமி வழங்கியது.

இந்நிலையில், நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் தனது 93-வது வயதில் உயிரிழந்தார். ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்சின் மறைவுக்கு நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com