பிரபல 'ஹரி பைக்கர்ஸ்' நிகழ்ச்சி தொகுப்பாளர் புற்றுநோய் பாதிப்பால் மரணம்


பிரபல ஹரி பைக்கர்ஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் புற்றுநோய் பாதிப்பால் மரணம்
x
தினத்தந்தி 1 March 2024 12:34 PM IST (Updated: 1 March 2024 1:00 PM IST)
t-max-icont-min-icon

பிரபல 'ஹரி பைக்கர்ஸ்' நிகழ்ச்சி தொகுப்பாளர் டேவ் மயர்ஸ் புற்றுநோய் பாதிப்பால் மரணமடைந்தார்.

லண்டன்,

பிரபல ஆங்கில ஊடகமான பி.பி.சி.யில் ஒளிபரப்பாகும் 'ஹரி பைக்கர்ஸ்' நிகழ்ச்சி உலக அளவில் பிரபலமாகும். இந்த நிகழ்ச்சியில் பைக்கில் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்து அங்குள்ள உணவுவகைகள் குறித்தும் அங்குள்ள வாழ்வியல் முறை குறித்தும் பல ஆண்டுகளாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களாக சி கிங் மற்றும் டேவ் மயர்ஸ் செயல்பட்டு வந்தனர். இவர்களுக்கு உலக அளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இதனிடையே, 66 வயதான டேவ் மயர்ஸ் புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், டேவ் மயர்ஸ் நேற்று உயிரிழந்தார். புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த டேவ் மயர்ஸ் நேற்று தனது வீட்டில் உயிரிழந்ததாக 'ஹரி பைக்கர்ஸ்' நிகழ்ச்சி சக தொகுப்பாளரான சி கிங் தெரிவித்துள்ளார். மறைந்த டேவ் மயர்ஸ் குடும்பத்தினருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1 More update

Next Story