டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மார்ச் 8 முதல் 'ஹார்ட் பீட்' சீரிஸ் ஒளிபரப்பு

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'ஹார்ட் பீட்' சீரிசை மார்ச் 8 முதல் ஒளிபரப்பு செய்யவுள்ளது.
Published on

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'ஹார்ட் பீட்' சீரிசை மார்ச் 8 முதல் ஒளிபரப்பு செய்யவுள்ளது.

ஒரு மருத்துவமனையின் பின்னணியில் இளமை துள்ளும் காதல் கலந்து, இதயத்தை வருடும் பொழுதுபோக்கு சீரிசாக, ரசிகர்களுக்கு இனிய அனுபவத்தை இந்த சீரிஸ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு மனிதனின் இதயத்தில் நான்கு அறைகள் இருப்பது போல், மருத்துவமனையில் வேலை பார்க்கும் தனது வாழ்க்கையில், எப்படி நான்கு உலகங்கள் இருக்கின்றன என்பதை, மருத்துவமனையில் முதல் நாள் பணிக்கு வந்த மருத்துவர் ரீனா விளக்குவதை ப்ரோமோ வீடியோ காட்டுகிறது.

டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டாரின் முந்தைய ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ்களான 'மத்தகம்' மற்றும் 'லேபிள்' சீரிஸ்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக வெளியாகவுள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் "ஹார்ட் பீட்" சீரிக்க்கு, ரசிகர்களிடம் பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த சீரிசை இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்குகிறார். ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த சீரிஸ் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com