'பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்....' - கீர்த்தி பாண்டியனை கரம்பிடித்தார் நடிகர் அசோக் செல்வன்...!

நடிகர் அசோக் செல்வன் - நடிகை கீர்த்தி பாண்டியன் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
'பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்....' - கீர்த்தி பாண்டியனை கரம்பிடித்தார் நடிகர் அசோக் செல்வன்...!
Published on

பாளையங்கோட்டை,

தெகிடி, போர் தொழில் உள்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் அசோக் செல்வன். மேலும் 'ஓ மை கடவுளே', 'நித்தம் ஒரு வானம்' உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.தெகிடி படத்தில் இடம் பெற்றிருந்த "பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்" பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் அசோக் செல்வன். சமீபத்தில் வெளியான போர் தொழில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அசோக் செல்வனும், 'தும்பா', 'அன்பிற்கினியாள்' படங்களில் நாயகியாக நடித்தவரும், நடிகர் அருண்பாண்டியனின் மகளுமான கீர்த்தி பாண்டியனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர்.

இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இவர்களின் திருமணம் இன்று பாளையங்கோட்டை அருகே உள்ள இட்டேரியில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com