'லியோ' படத்தை உங்களுடன் சேர்ந்து பார்க்க விரும்புகிறேன் - ஷாருக்கானுக்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் ..!

அனிருத் இசையில் இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
'லியோ' படத்தை உங்களுடன் சேர்ந்து பார்க்க விரும்புகிறேன் - ஷாருக்கானுக்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் ..!
Published on

சென்னை,

அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். ஹீரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இன்று வெளியாகிறது.

இந்த படத்தின் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அனிருத் இசையில் இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. சமீபத்தில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது.

இந்த படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் சுமார் 5 லட்சம் டிக்கெட்டுக்கள் விற்று சாதனை படைத்ததாக அறிவிக்கப்பட்டது.

இன்று ஜவான் படம் வெளியாகும் நிலையில் படக்குழுவை வாழ்த்தும் வகையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை டேக் செய்து நடிகர் ஷாருக்கான் தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் "மிக்க நன்றி. நேரம் கிடைத்தால் படத்தைப் பார்க்கவும். மேலும் படத்தை தமிழில் பார்த்து சரியா உள்ளதா என்று கூறுங்கள். லியோ படத்திற்கு என்னுடைய அன்பு எப்போதும்." என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், இயக்குநர் லோகேஷ், "ஜவான் படத்தை பார்க்க ஏற்கனவே திட்டமிட்டுள்ளேன்; 'லியோ' வெளியானவுடன், அதை உங்களுடன் சேர்ந்து பார்க்க விரும்புகிறேன், படத்தை பற்றிய உங்களின் கருத்தை அறியவும் விரும்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

இன்று படம் வெளியாகும் நிலையில், இவர்களின் இந்த அன்பை பரிமாறும் உரையாடல்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com