மொரீஷியசில் இளையராஜா - வைரலாகும் புகைப்படம்


மொரீஷியசில்  இளையராஜா - வைரலாகும் புகைப்படம்
x

மொரீஷியசில் இருக்கும் இளையராஜாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை,

1976 -ம் ஆண்டு 'அன்னக்கிளி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, 1,000 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார்.

இன்றும் அவர் இசையமைப்பில் உருவாகும் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. சமீபத்தில் வெளியான மலையாளப் படமான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்திலும் 'கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே' என்ற பாடலைப் பயன்படுத்தி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றனர்.

இதனிடையே,ரஜினியின் 'கூலி' பட டீசரில் தன் இசை பயன்படுத்தப்பட்டுள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா, தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது கடும் விமர்சனத்துக்குள்ளானது. இந்நிலையில், கோடையை கொண்டாடுவதற்கு இசையமைப்பாளர் இளையராஜா மொரீஷியஸ் தீவுக்கு சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் இளையராஜா வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Next Story