கரீனா, கத்ரீனா இல்லை...இவர்தான் ஒரு பாடலுக்கு நடனமாட அதிக சம்பளம் வாங்கும் நடிகை

டாப் நடிகைகள் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக இவர் ஒரு பாடலுக்கு நடனமாட வாங்குகிறார்.
கரீனா, கத்ரீனா இல்லை...இவர்தான் ஒரு பாடலுக்கு நடனமாட அதிக சம்பளம் வாங்கும் நடிகை
Published on

சென்னை,

20 வருடங்களுக்கும் மேலாக தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை ஒருவர் தற்போது ஒரு பாடலுக்கு நடனமாட அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கிறார்.

அவ்வாறு இந்தியாவில் ஒரு பாடலுக்கு நடனமாட அதிக சம்பளம் வாங்குபவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2021 -ம் ஆண்டு வெளியான புஷ்பா தி ரைஸில் இடம்பெற்ற ஊ சொல்றியா பாடலில் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார்.

இவர் இந்த ஒரு பாடலுக்கு நடனமாட ரூ.5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. இது டாப் நடிகைகள் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்தை விட அதிகமாகும். இதன் மூலம் இந்தியாவிலேயே ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனமாட அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக சமந்தா உள்ளார்.

இதற்கு அடுத்தபடியாக நடிகை தமன்னா ரூ.3 கோடியும், நோரா பதேகி ரூ.2 கோடியும், கரீனா ரூ.1.5 கோடியும் வாங்குகின்றனர். மேலும், கத்ரீனா மற்றும் மலைகா அரோரா ஒரு பாடலுக்கு நடனமாட ரூ.50 லட்சம் முதல் 1 கோடி வரை சம்பளம் பெறுகிறார்கள். இருப்பினும், பல ஆண்டுகளாக இருவரும் நடனமாடவில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com