கணவரை பிரிகிறாரா ஐஸ்வர்யா ராய்... வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வீடியோ...!

Image Credits : Instagram.com/aishwaryaraibachchan_arb
கருத்து வேறுபாடு காரணமாக ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியானது.
சென்னை,
உலக அழகி பட்டத்துடன் சினிமாவில் நுழைந்த ஐஸ்வர்யா ராய் இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதன்மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
இவர் கடந்த 2007-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு கடந்த 2011-ம் ஆண்டு ஆராத்யா என்கிற பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்னர் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா ராய், தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கிவிட்டார். சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அபிஷேக்பச்சன் கையில் திருமணம் மோதிரம் இல்லாததால் இருவரும் விவாகரத்து செய்துகொள்ள உள்ளதாக வதந்திகள் பரவின. ஆனால் இந்த வதந்திகளுக்கு இவர்கள் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படாமல் இருந்தது.
வைரலாகும் புகைப்படம்
இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அபிஷேக்கின் அக்கா ஸ்வேதா பச்சனின் மகன் அகஸ்திய நந்தா அறிமுகமாகும் 'த ஆர்ச்சிஸ்' படத்தின் பிரிமியர் ஷோவில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் நடிகை ஐஸ்வர்யா ராய் குடும்பத்துடன் பங்கேற்றுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.






