ராமாயணம் படத்தில் நடிக்கிறாரா விஜய்சேதுபதி?

ராவணனின் தம்பி வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராமாயணம் படத்தில் நடிக்கிறாரா விஜய்சேதுபதி?
Published on

சென்னை,

நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் கதையை மையமாக வைத்து தயாராகும் புதிய படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். கன்னட நடிகர் யாஷ் ராவணனாக வருகிறார்.

இந்த படத்தில் அனுமானாக நடிக்க சன்னி தியோல், கும்பகர்ணனாக நடிக்க பாபிதியோல் ஆகியோரை அணுகி பேசி வருகிறார்கள். இதுபோல் ராவணனின் தம்பி விபீஷணன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராமாயணம் படம் மூன்று பாகங்களாக உருவாக இருக்கிறது. ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் எடுக்கின்றனர். படம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் ரகசியமாக வைத்துள்ளனர்.

இந்த நிலையில் ராமாயணம் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி உள்ளது. முதல் நாள் படப்பிடிப்பில் இருந்து சில புகைப்படங்கள் வலைதளத்தில் கசிந்து வைரலாகின்றன. அதில் பழங்கால கட்டிட கலையை பிரதிபலிக்கும் வகையில் ஏராளமான தூண்கள், மரச்சுவர்கள், கோவில் போன்றவை உள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com